ஐ.எம்.எப். மரணப் பொறியைத் தோற்கடிப்போம்; ரணில் – மோடியின் திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்.

அரசுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இந்தக் கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
“ஐ.எம்.எப். மரணப் பொறியைத் தோற்கடிப்போம்”, “ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.