மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!
கடந்த இரண்டு மாத காலமாகவே சற்று உடல் நல குறைவில் இருந்து வந்த திரு பங்காரு அடிகளார் இன்று மாலை திடீர் மரணமடைந்தார். இதயவலி காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருந்ததால், சிகிச்சை பெற்று வந்தார்.
30 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்மருவத்தூர் மிகவும் பின்தங்கிய பகுதி. ஆனால், இன்று மேல்மருவத்தூரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பங்காருவின் சித்தர் பீடம் நிறைய முன்னேற்றியிருக்கிறது.
உடல் நல குறைவினால் உயிரிழந்த ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே ஒரு கிராமத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர். கடந்த 1966ஆம் ஆண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை துவக்கினார்.
மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை ஒருங்கிணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது. தைப்பூசம் போன்ற நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம்.
கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் எனும் வழக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கியதும் மேல்மருத்துவர் சித்தர் பீடம்தான். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது மிகப் பெரிய சமயப் புரட்சியாக பாரக்கப்பட்டது. உயர்சாதி மத குருக்கள் மட்டுமே தமிழகத்தில் பெரிய மத நிறுவனங்களை உருவாக்க முடியும் என்ற விதியை உடைத்தவர் பங்காரு. மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த மதகுரு பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.