AUS vs PAK: ‘300 அடித்தும் தோற்ற பாகிஸ்தான்’.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் பெங்களூரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டர்களுக்கு சாதகமான மைதானத்தில் முதலில் களமிறங்கி பெரிய ஸ்கோர் அடிக்காமல், பந்துவீச்சைத் தேர்வு செய்ததற்கு, பாகிஸ்தான் அணி அதற்கான பலனை அனுபவித்தது.
பெங்களூர் மைதானம் அளவில் சிறியது என்பதால், சொதப்பல் பந்துகளை சிக்ஸருக்கு விரட்ட ஆஸ்திரேலிய அணி ஓபனர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் முடிவு செய்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி ஓபனர்கள் ஏமாந்துபோகக் கூடாது என்பதற்காக, பாகிஸ்தான் பௌலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி, சிக்ஸர்களை அடிக்கவிட்டனர். சிங்கில் ஓடுவதைவிட, பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதுதான் சுலபமாக இருந்தது. அந்த அளவுக்கு பாகிஸ்தான் பௌலர்கள் படுமோசமான பந்துவீசி சொதப்பினார்கள்.
ஆஸ்திரேலிய அணியில் ஓபனர்கள் டேவிட் வார்னர் 163 (124), மிட்செல் மார்ஷ் 121 (108) இருவரும் அபாரமாக செயல்பட்டு ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள். இதனால், ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்தவர்கள் யாரும் 30 ரன்களை கூட அடிக்கவில்லை. ஸ்டாய்னிஸ் 21 (24), இங்கிலிஸ் 13 (9) ஆகியோர் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்களை அடித்தார்கள். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 367/9 ரன்களை சேர்த்தது.
ஷாஹீன் அப்ரீதி கடைசி நேரத்தில் அபாரமாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விடுடக்கொடுதுத, 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஹரிஸ் ரௌப்பும் 3/83 விக்கெட்களை வீழ்த்தினார்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியிலும், ஓபனர்கள் சபிக் 64 (61)ர இமாம் உல் ஹக் 70 (71) இருவரும் அபாரமாக செயல்பட்டார்கள். இதனால், துவக்கத்தில் பாகிஸ்தான் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. இருப்பினும், அதன்பிறகு களமிறங்கியவர்கள் யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 46 (40) ரன்களை மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். பாபர் அசாம் 18 (14), சௌத் ஷாஹீல் 30 (31), இப்டிகார் அகமது 26 (20) போன்றவர்களும் படுமோசமாக சொதப்பினார்கள். இதனால், பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 305/10 ரன்களை மட்டும் சேர்த்து, 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஆடம் ஜம்பா அபாரமாக பந்துவீசி பாபர் அசாம், ரிஸ்வான், இப்டிகார் அகமது முகமது நவாஸ் ஆகிய முக்கிய விக்கெட்களை கைப்பற்றி, 10 ஓவர்களில் 53 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால்தான், ஆஸ்திரேலிய அணியால் வெற்றியைப் பெற முடியந்தது.