தமிழ் சைகை மொழி பயிற்சி நெறியானது யாழில் தொடங்கியது …

தமிழ் சைகை மொழி பயிற்சி நெறியானது விது நம்பிக்கை நிதியம், யாழ் பாதுகாப்பு படை தலைமை அலுவலகம், வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனம் என்பவற்றின் வழிகாட்டல் அனுசரனையுடன் அண்மையில் சிவில் பாதுகாப்பு அலுவலர் லயன். கேணல் அமித பெரேரா தலைமையில் ஆரம்பமானது.
நிகழ்வில் விது நம்பிக்கை நிதிய பணிப்பாளர், வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவன தலைவர், வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் மரியாதைக்குரிய.சுகிர்தன்,
யாழ் மாவட்ட செயலகம் சார்பாக திரு சுதர்சன் மற்றும் பயிற்சி நெறியில் இணைந்த மாணவர்கள், விது நம்பிக்கை நிதிய குழுமத்தினர், மாற்றுதிறனாளிகள், பாதுகாப்பு படைப்பிரிவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்