’20’ திருத்தத்தை ஆதரிக்கும் கறுப்பாடுகள் களையப்படும்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் எமது பங்காளிக் கட்சியினர் ஆதரித்தால் அவர்களுடன் எனக்கு எந்த அரசியல் தொடர்பும் இருக்காது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாட்டின் நன்மையை மையமாகக் கொண்ட ஒரு திருத்தம் அல்ல, மாறாக ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
இதை நூற்றுக்கு 50 வீதம் வரை அரசு ஏற்கனவே வாபஸ் பெற்றதற்கான தகவல் என்னிடம் இருக்கின்றது.
இந்தச் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தவர் யார் என்பதை இராஜாங்க புலனாய்வு சேவைகளால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்” – என்றார்.