திரைப்படத்தின் கலெக்ஷனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ‘லியோ’ வசூல் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “திரைப்படத்தின் கலெக்ஷனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முன்பே சொல்லியிருந்தேன். அதை தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். திரையரங்கில் மக்கள் ரெஸ்பான்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாருக்கும் ரொம்ப பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்ததாக கலவையான விமர்சனங்களும் இருந்தது அதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.