வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்படவிருந்த குடும்பத்தை சமயோசிதமாகக் காப்பாற்றிய இளைஞர்.

சவூதியில் மழை காலம் தொடங்கி விட்டது.
நேற்றைய தினம் புறநகரில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த கார் அடித்துச் செல்லக்கூடிய அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டது.
அங்கு நடைபெற்று வரும் சாலைப் பணிகளுக்காக புல்டோசர் இயக்கி வந்த இளைஞர் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு புல்டோசர் மூலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட இருந்த காரை தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக இழுத்து வந்தார்.
இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சவூதி போக்குவரத்து காவலர்கள் அந்த இளைஞரை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.