சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: உயிரிழப்பில் உத்தர பிரதேசம்
நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 64,105 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.
உயிரிழப்புகளில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், அடுத்தபடியாக தமிழகமும் உள்ளன.
நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 53 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,68,491 போ் உயிரிழந்தனா். 4,36,366 போ் காயமடைந்தனா்.
2021-ஐ ஒப்பிடுகையில், விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், உயிரிழப்பு 9.4 சதவீதமும், காயமடைவது 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள் மூலம் ஏற்படும் சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டாம் ஆண்டாக அதிகமாக உள்ளது.
2024-இல் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.