இளைஞரை விரட்டி நடுரோட்டில் கார் ஏற்றி கொன்ற வாடிக்கையாளர் – கொடூரம்!
வாடிக்கையாளர் ஒருவர் இளைஞரை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், புலகேசி நகர்ப் பகுதியில், ஆஸ்கர் என்பவர் ‘யூஸ்டு கார்’ என்ற பெயரில் ஒரு கார் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடம் அம்ரீன் என்ற வாடிக்கையாளர் சில மாதங்களுக்கு முன்பு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆனால் காருக்கான முழு தொகையான ரூ.4 லட்சத்தை கொடுக்கவில்லை. அதனால் மீதத் தொகையை அஸ்கர் பலமுறை கேட்டும் அம்ரீன் கொடுக்காததால், அஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து உடனடியாக பணத்தை கொடுக்கும்படி அம்ரீனை எச்சரித்தனர். ஆனாலும் அவர் பணத்தை கொடுக்கவில்லை, அதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு ஸ்கார்பியோ காரில் ஆஸ்கரை பின் தொடர்ந்து சென்ற அம்ரீன், அவரை காரில் விரட்டி அவர் மீது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார்.
முதலில் போலீசார் இந்த சம்பவம் சாலை விபத்து என வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவர் கார் ஏற்ற வரும்நபோது தப்பித்து ஓட நினைத்த அஸ்கரை காரை வளைத்து வந்து ஏற்றி கொலை செய்தது தெளிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்ரீன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அவருடைய நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.