தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டுள்ளார் : கொழும்பு மேலதிக நீதவான்

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குற்றமென்று கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று (01) பிரேத பரிசோதனையின் போது சமர்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிபதி இந்த தீர்ப்பை அறிவித்தார்.
இதன் மூலம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் நீதவான் வழங்கிய உத்தரவின் பிரகாரம், இச்சம்பவத்தின் மூலம் குற்றம் குறித்த தகவல் வெளிவரும் எனவும், அதற்கமைவாக சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.