34வது தேசிய இளைஞர் மாவட்ட விளையாட்டு விழாவில் தெல்லிப்பளை முதலிடம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்ட விளையாட்டு விழாவின் Over all champion கிண்ணத்தை தெல்லிப்பளை பிரதேச இளைஞர் சம்மேளனம் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது. நடைபெற்று முடிந்த குழுப் போட்டிகள் மற்றும் 29/10/2023 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளிலும் கூடிய புள்ளிகளைப் பெற்று மாவட்டச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
முறையே 2ஆம் இடத்தினை சண்டிலிப்பாய், உடுவில் பிரதேச சம்மேளனங்களும் 3ஆம் இடத்தினை யாழ்ப்பாண பிரதேச சம்மேளனமும் பெற்றுக் கொண்டன.