டெல்லியில்’கடுமையான’ பிரிவுக்குச் சென்ற காற்றின் தரம்!
டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவுக்குச் சென்றது.
டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக ‘மிகவும் மோசம்'(very poor) பிரிவில் இருந்த காற்றின் தரம் இன்று ‘கடுமையான'(severe) பிரிவுக்குச் சென்றது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, தில்லியின் லோதி சாலை பகுதியில் காற்றின் தரக் குறியீடு 438 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஜஹாங்கிர்புரி பகுதியில் 491, ஆர்.கே. புறம் 486, தில்லி விமான நிலையம் 473 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
காற்றின் தரக் குறியீடு 400 – 500 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘தீவிரம்’ என வகைப்படுத்தப்படுகிறது.
காற்றின் தரம் மோசமானதையடுத்து தில்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.