ஹமாஸால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் மரணம்!
இலங்கை வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சுஜித் யட்டவர பண்டார, ஹமாஸ் அமைப்பினால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது இறந்துவிட்டதாகவும் இஸ்ரேல் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாத சடலமாக கிடைத்த சுஜித் யட்டவர பண்டாரவினதும், அவரது பிள்ளைகளினதும் DNA மாதிரிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் பிரிவு இன்று (03) உறுதிப்படுத்தியுள்ளது.
சுஜித் பண்டாரவின் மனைவியை பேசும் போது,
”நாங்கள் இருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் துபாயிலிருந்து வந்தோம். திருமணமாகி சில காலம் கழித்து, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கணவர் வெளிநாடு சென்றார். குறிப்பாக இரண்டு குழந்தைகளுக்கும் நன்றாகக் கற்பிப்பது அவசியமாக இருந்தது. எங்களுக்கும் சொந்த வீடு ஒன்றும் தேவைப்பட்டது.
எனவே, இரண்டு பிள்ளைகளையும் வென்னப்புவவிலுள்ள தனியார் ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் கற்க ஆர்வமாக உள்ளனர். பின்னர் வென்னப்புவ கொலொஞ்சாடிய பிரதேசத்தில் வீடு ஒன்றை வாங்கினோம். இன்னும் அந்த வீட்டுக்கு அவர் வராதது எனக்கு ரொம்ப வருத்தம்.
சம்பவத்தன்று அவர் எனக்கு போன் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் சத்தம் கேட்டது. அப்போது துப்பாக்கி சத்தம் கேட்பதாக கூறினார். ஜாக்கிரதையா இருங்க எனச் சொன்னேன். அதன்பின், பல நொடிகள் ஆகவில்லை… அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. என்ன நடந்தது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை”
மதச் சடங்குகள் மற்றும் பொது மரியாதையின் பின்னர் அவரது உடல் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மறைந்த சுஜித் பண்டார யத்வாரவின் மறைவுக்கு , இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களும் , தூதரகமும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.