யாழ்ப்பாணம் பழைய கச்சேரியைப் பார்வையிட்ட சீனத் தூதுவர்!
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டனர்.
சீனத் தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனத் தூதுவர் குறித்த கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.