இஸ்ரேல்-ஹமாஸ் போர் சின்னங்களை பயன்படுத்துவோர் சிங்கப்பூருக்கு வர அனுமதி மறுப்பு.
உரிமம் பெறாமல் பொது வெளியில் இஸ்ரேஸ்-ஹமாஸ் போர் தொடர்பான அடையாளச் சின்னங்களை அணிவது குற்றம் என்று உள்துறை அமைச்சு திங்கட்கிழமையன்று அறிவித்தது.
இது வெளிநாட்டு சின்னங்கள் (வெளிப்படுத்துவதை தடுக்கும்) 1949ஆம் ஆண்டு சட்டத்தின்படி குற்றமாகும் என்றும் குற்றம் இழைப்போருக்கு ஆறுமாத சிறைத் தண்டனையுடன் $500 அபராதமும் விதிக்கப்படலாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் இத்தகைய அடையாளச் சின்னங்களை அணிந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு சிங்கப்பூருக்குள் வர அனுமதி மறுக்கப்படலாம் என்றும் அமைச்சு நினைவூட்டியது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் தொடர்பான வெளிநாட்டு அடையாளச் சின்னங்கள் இணையத்தில் விற்பனையாவதை தான் அறிவதாகவும் அவற்றை பொதுமக்கள் அணிவதைத் தான் அறிந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சு கூறியது.