சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறை துரதிஷ்டமாக ஆட்டமிழந்த மெத்திவ்ஸ்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் 5ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய அஞ்சலோ மெத்திவ்ஸ் துரதிஷ்டவசமான வகையில் ஆட்டமிழந்திருந்தார்.
அதற்கு முன்னர் ஆட்டமிழந்த சதீர சமரவிக்ரமவை அடுத்து, ஆடுகளத்திற்குள் நுழைந்த அஞ்சலோ மெத்திவ்ஸ் துடுப்பாட்டத்திற்காக தயாராகாமல் தாமதித்ததால் எதிரணியான பங்களாதேஷ் வீரர்கள் அவரை ஆட்டமிழந்ததாக அறிவிக்குமாறு கோரிய நிலையில் ‘Time Out’ முறையில் அவர் ஆட்டமிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

மைதானம் நுழைந்த அவர் தனது தலைக்கவசத்தின் பட்டி அறுந்திருந்ததால், அவர் மற்றுமொரு தலைக்கவசத்தை கொண்டு வரும் வரை காத்திருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இவ்வாறான ஆட்டமிழப்பு இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில், டெல்லியில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

Leave A Reply

Your email address will not be published.