சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: சிஆர்பிஎஃப் வீரர் காயம்
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தொண்டமார்கா பகுதியில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தார்.
நக்ஸலைட்டுகள் வைத்த கண்ணிவெடி தாக்குதலில் தேர்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த வீரர் காயமடைந்தார். இவர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமாக உள்ளார்.
சத்தீஸ்கரில் நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் திங்கள்கிழமை சிக்கி 2 தோ்தல் பணியாளா்களும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஒருவரும் காயமடைந்தனர்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் சூழலில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 20 தொகுதிகளுக்கு உள்பட்ட 5,304 வாக்குப் பதிவு மையங்களில் 60,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
நாராயண்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது நக்ஸல்களின் தாக்குதலில் பாஜக மூத்த தலைவா் ஒருவா் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.