கிரிக்கெட் பிரச்சினைக்குத் தீர்வு காண அமைச்சரவை உப குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, கிரிக்கெட் பிரச்சினை பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போதே இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை முன்வைக்க அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான அலி சப்ரி, டிரான் அலஸ், காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.