அவிசாவளை வீடொன்றில் இளைஞரின் சடலம் மீட்பு!

அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தார் என்று சந்தேகிக்கப்படும் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 22 வயதான ஹுலத்துவ, கத்தாதெத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், அவிசாவளை பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.