கட்டடக் கலைஞர்களை பயிற்றுவிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்.

திறன் அடிப்படையிலான கட்டடக் கலைஞர்களை பயிற்றுவிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்.

அரசாங்கத்தின் சௌபாக்கியத்தின் நோக்கு எனும் தொனிப்பொருளில் திறன் அடிப்படையிலான கட்டடக் கலைஞர்களை பயிற்றுவிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2020 இன் கீழ் நிர்மாணத்துறையில் அவசியமான கட்டடக்கலை பயிற்சிக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சி 18.09.2020 வெள்ளிக்கிழமை மு.ப 10.00மணிக்கு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை(CIDA) மற்றும் இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்துடன்(NCASL) இணைந்து அரச மற்றும் தனியார் திட்டமாக செயற்படுத்தப்படவுள்ள இப் பயிற்சியில் மேசன், தச்சுத்தொழில், கம்பி வளைப்பவர், குழாய் பொருத்துநர், மாபில் பதிப்பு ஆகிய துறைகளில் 18-45 வயதிற்குட்பட்டு, NVQ தொழிற்தகைமைச் சான்றிதழை பெறாது தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் மற்றும் ஈடுபட ஆர்வமுடையயோர் இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்ளமுடியும்.

இதனடிப்படையில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்டு தொழிற்தகைமை சான்றிதழின்றி பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்களிடம் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் 132பேர் இன்றய திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 46பேருக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சி நாளை 19.09.2020சனிக்கிழமை துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இப் பயிற்சியில் பங்குபற்றுவோர் பதிவு செய்யப்பட்ட கம்பனிகளின் வேலைத்தளங்களில் மூன்று மாத காலத்திற்குட்பட்ட கோட்பாட்டு ரீதியான மற்றும் செயன்முறையிலான பயிற்சி. பயிற்சி முடிவில் சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட NVQ 02 அல்லது 03 மட்டத்திலான அரச சான்றிதழ். பயிற்சிக் காலத்தில் உபயோகப்படுத்தும் கைந்நூல் மற்றும் நாளாந்த செயன்முறைகளை பதிவு செய்வதற்கான புத்தகம். பயிற்சிக் காலத்தில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் இரு சீருடைத் தொகுதிகள். பயிற்சி நிறைவில் உபகரணத் தொகுதி ஒன்றினை கொள்வனவு செய்வதற்கான ஐயாயிரம் ரூபா பெறுமதியளயான வவுச்சர். ஓவ்வொரு பயிற்சி நிறைவில் நிர்மாணத்துறையில் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ். மூன்று மாத பயிற்சிக் காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்தம் பத்தாயிரம் ரூபா கொடுப்பணவு. சிறந்த முறையில் பயிற்சியினை நிறைவு செய்வோருக்கு நிர்மாணத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் வழிமுறை. பயிற்சி நிறைவில் நிர்மாணத்துறை கம்பனியில் தொழில் வாய்ப்பனை பெற்றுக்கொள்வதற்காக CIDA நிறுவனத்தின் சிபார்சு போன்றதான நன்மைகளுக்கு உரித்துடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயலக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை(CIDA) ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், NAITA மாவட்ட முகாமையாளர், தேசிய நிர்மாண ஒப்பந்த காரர் சங்க(NCASL) உறுப்பினர், சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், மனித வள அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், பயிற்சி விரிவுரையாளர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள், இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள், பயிங்சி பெறுவோர் என பல்தரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.