திருமணத்திற்காக இந்தியாவில் ‘ஷொப்பிங் ‘ செல்லும் பாபர் அசாம் .
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த ஆண்டு இறுதியில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது தனது திருமண விழாவுக்கான ஆடைகளை வாங்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் சப்யசாமி முகர்ஜியிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் வாங்கியுள்ளார்.
29 வயதான பாபர் தனது வருங்கால மனைவிக்காக விலையுயர்ந்த நகைகளை வாங்கியதாக இந்திய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.