மக்களுக்கான துரித சேவைகளை வழங்கும் இணைய வழி சேவை ஆரம்பிப்பு.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தினால் மக்களுக்கான வினைதிறன்மிக்க துரித சேவைகளை வழங்கும் நோக்கில் இணைய வழி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இணைய வழி குடும்ப பங்கீட்டு அட்டை அறிமுக விழா மற்றும் மரநடுகை என்பன பிரதேச செயலக வளாகத்தில் (18-09-2020) பகல் 10 மணியளவில் இடம்பெற்றன .
தற்போது மக்களுக்கு இலகுவான சேவையை வழங்க கூடிய வகையில் இணைய வழியிலான பங்கீட்டுஅட்டை அறிமுக விழா கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் 57வது படைப்பிரிவின் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சேனரத்யப்ப
572வது படைப்பிரிவின் தளபதி .தசனாயக்கா
மேலதிக அரச அதிபர்
க. சிறிமோகனன் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.திருலிங்கநாதன் ஆகியோருடன் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி சன்டசேகர பொலீஸ் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்