சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்.

பணமோசடி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை, உடுமுல்ல வீதியில் உள்ள கட்டிடம் மற்றும் தோட்டமொன்றை புனரமைப்பதற்காக தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 99,43,108 ரூபா மற்றும் 3 சென்ட் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.