இனி பள்ளி மதிய உணவில் பிரியாணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

மதிய உணவாக இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மதிய உணவோடு, காலை சிற்றுண்டியும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னோடி திட்டத்தை இதர மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
அந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மதிய உணவுடன் முட்டை அல்லது வாழைப்பழம் சேர்த்து வழங்கப்பட்டன. இதன் அடுத்தக்கட்டமாக வாரத்தின் குறிப்பிட்ட தினங்களில் முட்டை பிரியாணியாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதன் மற்றும் வெள்ளி என இரு தினங்களுக்கு மதிய உணவாக முட்டை பிரியாணியும், முட்டை பிரியாணிக்கு பதில், வழக்கமான மதிய உணவு மற்றும் அவித்த முட்டையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
முட்டை வேண்டாம் என்பவர்களுக்கு வாழைப்பழம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆய்வில் பெரும்பான்மையினோர் கருத்து தெரிவித்ததில் மாநில அரசு இந்த முயற்சியை கையிலெடுத்துள்ளது.