சர்வதேச கிரிக்கெட் சபை , இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இடைநிறுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று கூடி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் பொறுப்புகளை கடுமையாக மீறுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக அதன் விவகாரங்களை சுயாதீனமாக நிர்வகிப்பதற்கான தேவை மற்றும் கட்டுப்பாடு, ஒழுங்குமுறை ஆகியவற்றில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
இடைநீக்கத்தின் விதிமுறைகள் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் முடிவு செய்யப்படும்.