“புதிய மழை” புத்தக கண்காட்சியும் விற்பனையும்.

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் மாவட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்களை காட்சிப்படுத்துகின்ற “புதிய மழை” புத்தக கண்காட்சியும் விற்பனையும் எனும் செயல் திட்டம் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்றது.
கடந்த வருடம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் கரைச்சி பொதுநூலகத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டமானது இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் புலோப்பளை பொதுநூலகத்தில் சிறப்புற இடம்பெற்றது.
எதிர்வரும் ஆண்டு பூநகரி பிரதேச செயலர் பிரிவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.