ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் டீசர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது,
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. தீபாவளியையொட்டி இப்படத்தின் டீசரை இன்று (நவ.12) படக்குழு வெளியிட்டுள்ளது.
விக்ராந்த், விஷ்ணு விஷால் தலைமையிலான இரு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுத்து பெரும் கலவரம் வெடிப்பதுடன் டீசர் தொடங்குகிறது. இதனால் சில மரணங்கள் நிகழ்கின்றன.
இதனையடுத்து ரஜினியின் மாஸான என்ட்ரி. “விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க”, “குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க” என்று ரஜினி பேசும் வசனம் கவனம் ஈர்க்கிறது. டீசரில், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், செந்தில் ஆகியோரும் வருகின்றனர். ‘லால் சலாம்’ டீசர் வீடியோ: