லொத்தர் எண்களை மாற்றிய ராணுவ வீரர் கைது.

தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான சீட்டின் இலக்கம் ஒன்றை மாற்றி 2000 ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த இராணுவ சிப்பாய் ஒருவரை இராணுவத்தின் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் களுத்துறை மாவட்ட விற்பனைப் பிரதிநிதி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.