காஸா பகுதி மீது குண்டு வீசுவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்,

காசா பகுதியில் பொதுமக்கள் உயிரிழப்பதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரிஸில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மக்ரோன் இதனைத் தெரிவித்துள்ளார். காஸா முனையைத் தாக்குவதில் எந்த நியாயமும் இல்லை என்றும், போர் நிறுத்தத்தை அறிவிப்பது இஸ்ரேலுக்கு நன்மை பயக்கும் என்றும் பிரெஞ்சு ஜனாதிபதி கூறினார்.