இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக, மழை நிலை மேலும் தொடரும்.
இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக, மழை நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (Dmc)