இஸ்ரேலுக்கு எதிராக 159 எம்.பிக்கள் போர்க்கொடி! – ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மகஜர் கையளிப்பு.

பலஸ்தீன் – காஸாவில் மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனிதப் படுகொலையையும், கொடூர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபை தலையிடுமாறு கோரி 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர், இன்று காலை கொழும்பில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் கையளிக்கப்பட்டது.
அதன்பின்னர், அந்த மகஜரின் பிரதி கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், வீரசுமன வீரசிங்ஹ, பௌசி, ஹலீம், இஷாக் ரஹ்மான், ஹரீஸ், தௌபீக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.