ஜம்மு-காஷ்மீரில் 300 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து; 38 பேர் பலி.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தோடாவில் பகுதியில் உள்ள படோடே- கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் துருங்கல்- அசார் எனும் இடம் அருகே 300 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் 38 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.