காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையை முற்றுகையிட்டது இஸ்ரேல் (Video)
காஸா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையை இன்று (15) அதிகாலை சோதனையிட இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அல் ஷிஃபாவில் இன்னும் தங்கியுள்ள பாலஸ்தீனர்களை உடனடியாக சரணடையுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மருத்துவ வளாகத்தின் மேற்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சின் டைரக்டர் ஜெனரல் முனிர் அல்-பர்ஷ் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.
தான் இருக்கும் பகுதி சாம்பல் புழுதியால் நிரம்பியிருப்பதாகவும், மருத்துவமனையின் மேற்குப் பகுதியில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதாக தான் நம்புவதாக அல் ஜசீராவிடம் பார்ஷ் கூறியுள்ளார்.
மேலும், ஆக்கிரமிப்புப் படையினர் மருத்துவமனையின் தரைத்தளத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, சிறிது நேரத்தில் மேல் தளத்துக்கு வந்துவிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலியப் படைகள் முதலில் அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தாக்கியதாக காசா சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை இயக்குநர் முகமது சகோட் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அல்-ஷிஃபாவின் கட்டுப்பாடு முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.