மகிந்த, கோட்டா, பசிலின் குடிமை உரிமைகளை ரத்து செய்ய நடவடிக்கை ?

இலங்கையை திவாலாக்கியவர்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் இதற்கு காரணமானவர்களின் குடிமை உரிமைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என சமகி ஜன பலவேகய வெலிகம தொகுதியின் பிரதம அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்பை வைத்துள்ள அவர், அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வர வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார திவால்நிலை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட 7 பேரை பொறுப்பேற்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.