மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவு
மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 78 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், எஞ்சிய 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் 958 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். ஒரு கோடியே 63 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 18 ஆயிரத்து 833 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முதலமைச்சர் பூபேஷ் சிங் பாஹல், துணை முதலமைச்சர் டி.எஸ்.சிங் தேவ் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளராக களத்தில் உள்ளனர்.
இதேபோன்று, பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. 230 தொகுதிகளிலும் 2533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 5 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ள நிலையில், 64.000-க்கும் மேலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புத்னி தொகுதியில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடிகர் விக்ரம் மஸ்தாலும், சிந்த்வாரா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை எதிர்த்து பாஜக சார்பில் விவேக் பண்டி சாஹுவும் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 183 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வாக்குப் பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய, இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநில தேர்தல்கள் முடிந்ததும் அனைத்து மாநில வாக்குகளும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று எண்ணப்படும்.