தென்னை மரமேறிய அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ.
இலங்கையில் 700 மில்லியன் தேங்காய் பற்றாக்குறை என மக்களுக்குத் தெரிவிக்க தென்னை மரமேறி விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு ஒன்று வரக்கபொலவில் நிகழ்ந்தது.
நேற்று வரக்கபொலவிற்குச் சென்ற அமைச்சர் திரு.அருந்திகா பெர்னாண்டோ தேங்காய் பற்றாகுறையினைத் தெரிவிக்க மரத்தின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து பொது மக்களிடம் பேசினார்.
உள்ளூர் தொழிற்சாலைகளின் தேவை மற்றும் மக்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் 700 மில்லியன் தேங்காய் பற்றாக்குறை ஆகயிருக்கின்றது. எனவே கிடைக்ககூடிய,சாத்தியமுள்ள காலி இடங்களில் தென்னை மரங்கள் நடுவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தென்னை துறைக்கு ஊக்கம் அளிப்போம். நாட்டில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை உயர்ந்துள்ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
தேங்காய் பற்றாக்குறைக் குறித்து மக்களிடம் தகவலை தெரிவிக்க தென்னை மரத்தில் ஏறிய அமைச்சரின் இந்த செயல், நல்ல பலனை கொடுத்துள்ளதாக மீடியாக்கள் செயதி வெளியிட்டுள்ளன.