யாழில் சிவில் சமூகக் குழுவின் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள்!
வடக்கு – கிழக்கு சிவில் சமூகக் குழுவின் ஏற்பாட்டில் அரசியல் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நகரில் நேற்று (18) இடம்பெற்றது.
தந்தை செல்வா கலையரங்கில் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா, நிலாந்தன், மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
இந்த அரசியல் கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மதகுருமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
‘இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் செய்ய வேண்டியது?’ எனும் தொனிப் பொருளில் குறித்த கருத்தாடல் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுபட்ட செயற்பாடு குறித்து இந்தக் கருத்தாடலில் வலியுறுத்தப்பட்டது.