பெண்கள் நம்பிக்கையை காங்கிரஸ் உடைத்துவிட்டது… பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் மாநில பெண்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி உடைத்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வாக்குசேகரித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு மிகமோசமடைந்ததாக கூறினார். பெண்கள், தலித்துகள், பழங்குடியினத்தவர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சாடினார்.
இதனைத் தொடர்ந்து Nagaur பகுதியில் உள்ள வீர் தேஜாஜி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். Nagaur-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை என்று கூறினார். காங்கிரஸ்க்கு விடை கொடுத்து வழியனுப்பி வைக்க ராஜஸ்தான் மக்கள் தயாராகிவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.