அனைத்து தமிழ் கட்சிகளும் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதற்கான தடைகளை அரசாங்கம் விலக்க வேண்டுமெனக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் கையொப்பமிட்டனர்.

தியாகி திலீபன் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறுவதற்கான தடையை இலங்கை அரசாங்கம் இரு நாட்களுக்குள் விலக்க வேண்டும் என நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது.

அத் தீர்மானத்தினத்தினை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எழுத்து மூலம் கடிதமாக அனுப்புவதற்காக இன்று மீளவும் தமிழ் கட்சிகள் நல்லூரில் உள்ள வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானம் அலுவலகத்தில் ஒன்றுகூடின.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசியக் கட்சி, ஈழ சுயாட்சி விடுதலைக் கழகம் ஆகியவற்றோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசிய பசுமை இயக்த்தினரும் கையொப்பமிட்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.