மல்லாவியில் கோர விபத்து. குடும்பஸ்தர் மரணம்.!

முல்லைத்தீவு மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) காலை இடம் பெற்ற விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.