முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்கு JVP பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு!
நேற்று (22ம் திகதி) பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அது தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பணம் ஒதுக்குவதற்கு ஆதரவாக 62 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் கிடைத்தன.
தேசிய மக்கள் சக்தி அனுர திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.