காசாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாக இருந்த 13 பேர் விடுவிப்பு (வீடியோ)
காசாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாக இருந்த 13 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்கள் தற்போது எகிப்தில் இருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணயக்கைதிகள் ரஃபா வீதியொன்றில் வைத்து செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதை எகிப்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு முன் மருத்துவப் பரிசோதனைக்காக இக்குழுவினர் இஸ்ரேலிய மருத்துவமனைகளுக்கு விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள்.
இந்த பணயக்கைதிகள் தவிர 12 தாய்லாந்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று தொடங்கியது.
ஆனால் போர் நிறுத்தம் தற்காலிகமானது என்று இரு தரப்பும் கூறுகின்றன.
தற்காலிக போர்நிறுத்தம் உள்ளூர் நேரப்படி காலை 7:00 மணிக்கு தொடங்கியது .