விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்!
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் சிங் காலமானதால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
தேர்தலில் களத்தில் ஆயிரத்து 875 பேர் உள்ள நிலையில், 5 கோடியே 25 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், ஆட்சியை திரும்பவும் கைப்பற்ற பாஜக தீவிர பரப்புரை செய்தது.
டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ராஜஸ்தான் யார் கையில் என தெரியவரும்.