விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (27) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பான கடிதத்தை ரொஷான் ரணசிங்கவிடம் கையளித்தார்.
இலங்கையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சரவை அமைச்சர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சரவை அமைச்சர்கள் பலர் இன்று இரவு பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.