டுபாய் பறந்தார் ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) கலந்துகொள்வதற்காக டுபாய்க்குப் புறப்பட்டார்.
நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு அவர் புறப்பட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) இன்று (நவம்பர் 30) முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும்.
அதில் பங்கேற்பதற்காக ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சில அமைச்சர்கள் மற்றும் இலங்கை இளைஞர் சேவை மன்றத்தின் ஒரு குழுவும் தூதுக் குழுவாகச் சென்றுள்ளனர்.
ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நிதிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனும் பயணமானார்.