மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது.

இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பௌத்தம் மற்றும் மத நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இருந்த போதகர் அண்மையில் நாடு திரும்பினார்.
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று காலை 8.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் புலனாய்வுப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியதோடு, 10 மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருந்த அவர் , மீண்டும் இலங்கைக்கு வந்தடைந்த 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு தெரிவித்திருந்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மத போதகர் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.