காஸா பகுதியில் மீண்டும் பயங்கர போர்.
நேற்று முன்தினம் (01) காலை ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள் எவ்வாறு பயங்கரமாகியுள்ளன என்பதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ரொய்ட்டர்ஸிடம் வலியுறுத்தினார்.
போர் நிறுத்தம் அமுலில் இருந்த சில நாட்களில் உயிரச்சம் இன்றி காத்திருந்த 193க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பொதுமக்கள் நேற்று மற்றும் முந்திய இரு தினங்களில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
650க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் உள்ளூர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
நேற்று காலை முழுவதும், கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் படுகாயம் அடைந்த ஆதரவற்ற பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் நேற்று முன்தினம் (02) காசா பகுதியின் தெற்கே குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
கான் யூனிஸில், தற்காலிக போர்நிறுத்தத்திற்குப் பிறகு தாக்குதலால் மூன்று மசூதிகள் மற்றும் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் மற்றும் சாட்சிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நாசர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளை நேற்று காலை ஆறு முறை தாக்கின. இந்த புகை ஏற்கனவே வானத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.