சுவிற்சர்லாந்தில் 26வது ஆண்டாக தமிழ்மொழிப் பொதுத்தேர்வு.

சுவிற்சர்லாந்தில் 26வது ஆண்டாக தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020.
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வாக இன்று நாடு தழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளைப் பேணி சிறப்புற நடைபெற்றது.
இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5177 மாணவர்கள் பங்குபற்றினர்.