இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ரொஷானுக்கு எதிராக முறைப்பாடு.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
தேசிய விளையாட்டு நிதியத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய நிதியை அவர் மோசடி செய்துள்ளார் என்று குறிப்பிட்டு இந்த முறைப்பாடு இன்று செய்யப்பட்டுள்ளது.