சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி.
இந்தியன் பிரிமியர் லீக் ஐ.பி.எல். தொடரின் 13வது சீசனின் முதல் லீக் போட்டியில், சென்னை 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நடந்த முதல் லீக் போட்டியில், சென்னை, மும்பை அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, களத்தடுப்பை தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு சவுரப் திவாரி (42), குயின்டன் டி காக் (33) கைகொடுக்க, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சகார் (2), பும்ரா (5) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் லுங்கிடி 3, ஜடேஜா, தீபக் சகார் தலா 2, சாம் கரான், பியுஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன் (4), முரளி விஜய் (1) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு (71) டுபிளசி (58) ஜோடி அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டது.சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது